waste water

கொரோனாவை பரவல் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஹாலிஃபாக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த திட்டத்தின் முக்கிய ஆராய்ச்சியாளரான ஸ்டோட்டர்ட் கூறுகையில், ‘கொரோனா தொடர்பான பல்வேறு தகவல்களை நாங்கள் கேள்விப்பட்டு வருகிறோம். பாதிக்கப்படுகிறவர்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்.

மருத்துவ பரிசோதனை மூலம் மட்டுமே பலருக்கும் தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதனால் பரிசோதனைக்கு வேறு வழிகள் கிடைக்குமா என ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகளில் உள்ள கழிவுநீரை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என கூறியுள்ளார்.

மேலும் கழிவுநீரின் மூலம் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது கழிவுநீரில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்கு அது திருப்புமுனையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் பட்சத்தில் நமது சமூகத்தில் கொரோனா எங்கெல்லாம் இருக்கிறது என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும், தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending