புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து சோனியா தலைமையில் செவ்வாய்க் கிழமை இன்று மாலை தில்லியில் பேரணி நடந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று சோனியாவும் சில எம்பிக்களும் மனு கொடுத்தனர். முன்னதாக, நேற்று சென்ற பேரணிக்கு உள்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறிச் சென்ற காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்றும் சோனியா தலைமையில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இந்தப் பேரணி நடந்தது. சோனியா தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர் காங்கிரஸார் திரண்டு சென்றனர். இதில், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள் உள்பட 11 எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100 எம்.பி.,க்கள் இந்தப் பேரணியில் சென்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு 1 கி.மீ., முன்பே அவர்கள் தடுத்த நிறுத்தப் பட்டனர் சோனியாவும் 26 எம்.பி.,க்கள் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று மனு கொடுத்தனர். முன்னதாக, இன்று பிற்பகல் வரை பேரணிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. பேரணிக்கு சற்று நேரம் முன்னர்தான் அனுமதி கொடுத்தது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா: சோனியா தலைமையில் கண்டனப் பேரணி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari