telanana-kcr
telanana-kcr
  • கேசிஆர் ரகசியத்தை வேளியிட வேண்டும்… ரேவந்த் ரெட்டி.
  • தலைமைச் செயலகத்தின் கீழ் நிஜாம் காலத்து கஜானா புதையல்…. ரேவந்த் ரெட்டி பரபரப்பு விமர்சனம்.

சுமார் 11 நாட்களுக்குப் பிறகு தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர் பிரகதி பவன் வந்து பல துறைகளை மேல் ரிவ்யூ நிர்வகித்தார். அதனால் வேர் ஈஸ் கேசிஆர்? கே சி ஆர் மிஸ்ஸிங் போன்ற ஊகிக்க முடியாத பிரச்சாரங்களின் பரபரப்பு அடங்கியது.

ஆனால் அவர் ஃபார்ம் ஹவுசுக்கு சென்ற தேதியும் திரும்பவந்த தேதியும் கவனித்தால் அந்தந்த நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளை குறித்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்கிறார் காங்கிரஸ் எம்பி ரேவந்த் ரெட்டி.

செவ்வாய்க்கிழமை ஊடகத்தாரோடு உரையாடிய அவர் தலைமைச் செயலகத்தை இடித்த விஷயத்தில் பரபரப்பு கோணங்களை வெளிப்படுத்தினார்.

telangana-secretariat
telangana-secretariat

ஹைதராபாதில் உள்ள உசேன் சாகர் அருகில் இருக்கும் தலைமைச்செயலக கட்டிடத்திற்கு மிகப் பழங்கால வரலாறு உள்ளது. அங்குள்ள ஜி ப்ளாக் கட்டிடம் 132 ஆண்டுகளுக்குமுன் ஆறாவது நிஜாம் கட்டியது.

சென்றவாரம் இடிக்கும் வேலைகள் தொடங்கியதிலிருந்து தலைமைச் செயலகத்தின் கீழே நிஜாம் காலத்து கஜானா இருக்கிறது என்ற பிரச்சாரம் ஜோராக நடந்தது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
telangana-secretariat1
telangana-secretariat1

சமூக வலைதளங்களில் வைரலாக வந்த அந்த விஷயத்தின் மீது காங்கிரஸ் எம்பி ரேவந்த் ரெட்டி
பேசினார்.

அங்கு புதையல் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களை காட்டிய அவர் மறைவான புதையலுக்காகவே கேசிஆர் சீக்ரெட்டாக பவனத்தை இடித்தார் என்று குற்றம்சாட்டினார்.

தலைமைச் செயலகத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர் வரை போக்குவரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இடிக்கும் வேலைகளை தொடங்கினார்கள். நாங்கள் ஆராய்ந்ததில் என்ன தெரிந்தது என்றால்… புதையலுக்காகவே கட்டிடத்தை இடிக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் உள்ள ஜி ப்ளாக் கீழே நிஜாம் காலத்து கஜானா இருக்கிறது என்றும் நில மாளிகையில் நிஜாம் நிதிகளை மறைத்து வைத்துள்ளார் என்பது குறித்தும் ஏற்கனவே பல அறிக்கைகள் வந்துள்ளன. சுரங்கங்களின் கேந்திர நிலையம் ஜி பாளாக் கீழே இருக்கிறது என்று தொல்பொருள் துறை கடந்த காலத்தில் கூட அடையாளம் கண்டது. அவற்றை ஆராய்வதற்காக பர்மிஷன் அளிக்கவேண்டும் என்று தொல்பொருள் துறை கடிதம் எழுதினாலும் அதற்கு ஜிஹெச்எம்சி அங்கீகரிக்கவில்லை. அதுமட்டுமல்ல. அந்த கடிதம் எழுதிய அதிகாரியை பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள் கூட.

தலைமைச் செயலகத்தின் கீழ் மறைந்திருக்கும் புதையல் குறித்து அனைத்து முக்கிய பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன. கேசிஆரின் சொந்தப் பத்திரிக்கையில் கூட இதைப்பற்றி வரிசையாக கதைகள் வெளியாகின என்று ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

132 ஆண்டுகால தலைமைச் செயலக கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில் நடக்க வேண்டி இருக்கும் போது கேசிஆர் அரசாங்கம் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் போக்ரான் அணுகுண்டு ஆராய்ச்சியை விட இரகசியமாக இடிக்கும் வேலைகளை தொடருகிறார்கள் என்றும் நிபந்தனைகளை கடைபிடிக்காத காரணத்தால் தான் ஹை கோர்ட் ஸ்டே ஆர்டர் கொடுத்தது என்றும் ரேவந்த் ரெட்டி நினைவுபடுத்தினார்.

telangana-secretariat2
telangana-secretariat2

நிஜாம் காலத்து கஜானா விவகாரம் மீது தாம் ஹைகோர்ட்டை அணுகினோம் என்றும் இது பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள செல்வத்தோடு தொடர்புடைய அம்சம் ஆகையால் உடனே விசாரிக்க வேண்டும் என்று கோருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

செகயடேரியட் இடிப்பதற்கும் கேசிஆர் காணாமல் போனதற்கும் இடையில் ஏதோ புரியாத லிங்க் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி சந்தேகம் தெரிவித்தார் .

செகரடேரியட் இடிப்பதற்கு ஐகோர்ட்டு ஜூன் 29-ஆம் தேதி கிரீன் சிக்னல் கொடுத்தது. அதே நாளில் இருந்தே கேசிஆர் காணாமல் போனார் என்றும் மீண்டும் ஜூலை 10ம் தேதி செகரடேரியட் இடிப்பது பற்றி ஸ்டே கொடுத்தது என்றும் அதே நாளில் கேசிஆர் திரும்பி வந்தார் என்றும் அந்த 11 நாட்களில் சிஎம் என்ன செய்தார் எங்கிருந்தார் என்ற ரகசியங்கள் வெளிவர வேண்டி உள்ளது என்றும் கூறினார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

இப்போது உள்ள செக்ரடேரியட் கட்டிடத்தை இடிப்பதில் அரசாங்கம் ஏதோ திட்டம் செய்கிறது என்றும் ரகசியமாக நடந்து கொள்கிறது என்றும் நிஜாம் ரகசிய நிதிகளுக்காகவே இத்தகைய வேலையில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்பி ரேவந்த் ரெட்டி மீண்டும் அந்த இடத்தில் செக்ரடேரியட் நிர்மாணம் அசாத்தியம் என்றும் கூறினார்.

உசேன் சாகர் கேட்ச்மெண்ட் எல்லையில் வரும் அந்த இடத்தில் காங்கிரீட் நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்காது என்றும் பிரசாத் ஸடுடியோவோடு கூட அங்குள்ள நிர்மாணங்கள் அனைத்தும் தற்காலிகமானவையே என்றும் இந்த விஷயம் தெரிந்து கூட பூமிகளை அமைப்புகளுக்கு அளிக்கும் உத்தேசத்தோடு கேசிஆர் சர்க்கார் இடிப்பதற்கு தயாரானது என்றும் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending