auto-1

தன்னுடைன் சண்டை போட்ட பக்கத்து வீட்டு 13 வயது சிறுவனை ஒரு ஆட்டோ ட்ரைவர் கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சையை உண்டாக்கியுள்ளது .

மும்பையில் சமீபத்தில் பெய்த மழையின் போது ,மால்வாணி பகுதியில் இருக்கும் ஆட்டோ டிரைவர் கரன் பகதூர் தன்னுடைய வீட்டிற்குள் மழை நீர் புகாமலிருக்க சிறிய அளவில் ஒரு தடுப்பு கட்டி வைத்திருந்தார் .அதை அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் விளையாடும்போது உடைத்துவிட்டான் ,

இதனால் அந்த ஆட்டோ டிரைவர் பகதூர் அந்த சிறுவன் மற்றும் சிறுவனின் தாயோடு கடுமையான சண்டை போட்டுள்ளார் .அப்போது அவர்கள் அந்த ஆட்டோ ட்ரைவரை கடுமையாக திட்டியுள்ளார்கள் .இதனால் அந்த ஆட்டோ ட்ரைவர் அவர்களை பழி வாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார் .

கடந்த வெள்ளிக்கிழமைன்று அந்த ஆட்டோ டிரைவர் அந்த 13 வயது சிறுவனை தன்னுடைய ஆட்டோவில் ஜாலியாக ரெய்டு போகலாம் வா என ஒரு இடத்திற்கு கூட்டிப்போனார் .பிறகு அங்கு அவர் சிறுவனின் தலையில் அடித்து ,வெட்டிகொலை செய்து, அவனை ஒரு மூட்டையில் கட்டி ,மால்வாணி பகுதியிலுள்ள ஒரு காட்டில் போய் வீசிவிட்டு வந்துள்ளார் .

மறுநாள் மகனை காணாத தாய் போலீசில் புகார் தந்தபோது ,போலீசார் விசாரித்ததில் அந்த ஆட்டோ ட்ரைவர் இந்த கொலையை செய்ததை கண்டுபிடித்து ,அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending