மும்பை: தான் விராட் கோலியைக் காதலிப்பதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் கோலியை தீவிரமாகக் காதலித்து வருகிறார். இந்த நிலையில், மற்றொரு நடிகையான ராக்கி சாவந்த், தானும் கோலியை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், வெளிநாடுகளிலும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அதன் மூலம் பிரபலமான இந்தி நடிகை ராக்கி சாவந்த், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் கூற வேண்டுமானால், அவரை நான் காதலிக்கிறேன். அனுஷ்கா சர்மாவும், கோலியை காதலிப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், அனுஷ்கா, தன் காதலை, கோலியிடம் பகிரங்கமாக இன்னும் சொல்லவில்லை. நான், கோலி மீதான காதலை தற்போது வெளிப்படையாகத் தெரிவித்து விட்டேன். என் காதலை, கோலி ஏற்பார் என நம்புகிறேன் என்று கூறினார். ராக்கி சாவந்தின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்தி சினிமா வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari