ஆமதாபாத்:

விஸ்வகர்ம ஜயந்தியான இன்று சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை இது. நாட்டிலேயே மிகப் பெரிய அணை இது என்பதுடன், உலகின் இரண்டாவது மிகப் பெரும் அணை என்பது இதன் சிறப்பம்சம்.

டபோய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, தேவ சிற்பி விஸ்வகர்மாவின் ஜயந்தி நாளில் இந்த அணையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending