Achankovil river

14 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அந்த சிறுமி கர்ப்பமடைந்து நிர்கதியாக நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஒடிஷா மாநிலம் ராயகடவில் உள்ள காவல் நிலையத்திற்கு 14 வயது சிறுமி வந்தார். அவர் அங்குள்ள காவலர்களிடம், தன்னை ஆறு மாதங்களுக்கு முன்பு ஆறுபேர் சேர்ந்து கற்பழித்து விட்டதாகவும், தற்போது ஆறுமாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

vankodumai

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த பெண்ணிடம் நடந்த விஷயத்தை கேட்டனர். அவர் சொன்னதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள்.

அந்த பெண் அவர் வீட்டு பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த ஆறு பேர் அந்த பெண்ணை பலவந்தமாக அங்குள்ள புதர் பக்கம் தூக்கி சென்றுள்ளனர்.

பின்னர் ஆறு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து கொண்டு இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார். பிறகு நாளாக நாளாக அவர் கர்ப்பமானதும் விஷயம் வெளியே தெரிந்தது.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

அவரின் தாயார் இதுகுறித்து விசாரித்த அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து காவல்நிலையம் சென்று ஆறு பேர் மீதும் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending