sarathkumar
sarathkumar

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடலூர் மற்றும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து சமுதாய மக்களையும் சமத்துவ நடத்தி வரும் ஒரே கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மட்டுமே. இன்று வரை அ.தி.மு.க. கூட்டணியுடன் இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சிக்கு ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம். அதன் பின்னர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து இறுதி முடிவு செயப்படும். எப்போது போட்டியிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றார்.

மேலும், தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது மக்களுக்கு தான் பாதகமாகவே முடியும். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending