ஒரு ரூபாய்க்கு உணவு: கவுதம் காம்பீரின் புதிய உணவகம்!

இந்தியா சற்றுமுன்
Gowtham-kambir-1
Gowtham-kambir-1

இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் 1 ரூபாய்க்கு உணவு வழங்கும் உணவகத்தை திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் போட்டியிட்டு எம்பி ஆனார்.

இவர் வெற்றி பெற்ற கிழக்கு தில்லி தொகுதியில் காந்த நகர் மார்க்கெட்டில் முதன்முதலாக ஜன் ரசாய் உணவகத்தை கடந்த 2019ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கினார். தற்போது நியூ அசோக் நகர் பகுதியில் மற்றொரு கிளை துவக்கியுள்ளார்.

இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளையிலும் 1ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன் ரசோய் என்ற உணவகத்தை அமைத்துள்ளார்.

நாடகம் நடத்தவோ, தர்ணாவில் ஈடுபடுவோம் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், ஒரு உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்வதாக கூறியுள்ள கவுதம் காம்பீர், அடித்தட்டு மக்களுக்காக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்றும், இதை ஒர் இயக்கமாக மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பல மாநிலங்களில் மானிய விலையில் உணவுகளை மாநில அரசு திறந்துள்ள நிலையில் கவுதம் காம்பீரின் முயற்சி வித்தியாசமாக உள்ளதாகவும், அவரை மனதார பாராட்டுவதாக அம்மாநில பாஜக பொறுப்பாளர் பாண்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.