indian airlines
indian airlines

எரிபொருள் பற்றாக்குறையால் இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அது கொல்கத்தாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த விமானமாகும்.

கொல்கத்தாவிலிருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நடுவானில் தடுமாறியது. இதனையடுத்து விமானி பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் விமான ஆம்புலன்சை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தானில் சிவில் ஏவியேஷன் ஆணையத்தை அணுகினார்.

விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக கூறிய அவர், விமானத்தை தரை இறக்கவும், எரிபொருள் நிரப்பவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விமானம் அவசரமாக இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய இரண்டு மணி நேரம் கழித்து எரிபொருள் நிரப்பிய பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட்டது. அந்த விமானம் கஜகஸ்தானில் துஷன்பேவுக்கு சென்றது, அதில் ஒரு பிரிட்டிஷ் நோயாளியுடன் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் இருந்தனர்

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending