up-budget-1
up-budget-1

இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 5.50 லட்சம் கோடி ரூபாய்க்கு உத்தரபிரதேச மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் தாக்குதலில், சுமார் 5.50 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ramar-kovil
ramar-kovil

இதில் குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, கட்டுமான பணிகளுக்கு மட்டும் ரூபாய் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரப் பிரதேச மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 5.50 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் போலவே காகிதம் அல்லாத டிஜிட்டல் முறையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

up-budget-2
up-budget-2

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா இந்த பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்தபோது அவர் பேசியதாவது,

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மற்றும் சாலைப் பணிகளை மேம்படுத்துவதற்கும் சுமார் 300 கோடி ரூபாயும், வாரணாசி மற்றும் அயோத்தியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கவதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending