fair
fair

உத்தரபிரதேச மாநிலம் ஷஜகான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடியபடி பிப்ரவரி 23ஆம் தேதி மாலை கிடந்துள்ளார்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

கல்லூரி மாணவி அளித்த வாக்குமூலத்தில், ராய்கேடா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அது தோல்வி அடைந்ததால் அவர்கள் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் கல்லூரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகளில் உள்ள எண்களை வைத்தும், கல்லூரி நண்பர்களிமும் போலீஸார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, மேல்சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending