புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல்9-ஆம் தேதி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறையாக 7 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9-ந்தேதி பிரான்ஸ்ஸுக்கு செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் பிரான்ஸ்வா ஹொலாந்தை சந்தித்து பேசுகிறார். அங்கு நிகழ்ச்சிகள் சிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கலந்து கொள்ளும் மோடி, ஏப்ரல் 12ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனி செல்கிறார். அங்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். அங்குள்ள வர்த்தகக் கண்காட்சியிலும் பங்கேற்கும் மோடி பின்னர் ஏப்ரல் 14-ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கனடா செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்துப் பேசுகிறார். கனடாவில் டொரண்டோ நகரில் இந்திய வம்சாவளியினரின் சார்பில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.3 நாடுகள் பயணத்தை ஏப்ரல் 16-ந்தேதி நிறைவு செய்கிறார். இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தகவல் தெரிவித்தார்.
Link West. PM @narendramodi to visit France, Germany & Canada April 9 -16 as part of India’s “Link West” approach. https://t.co/Yh4eJwhI8n — Syed Akbaruddin (@MEAIndia) March 25, 2015