Ram Swaroop Sharma - 2026

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி லோக்சபா எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றவர் ராம் ஸ்வரூப் சர்மா. 2-வது முறையாக லோக்சபா எம்.பி. யானவர் சர்மா.

அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராம் ஸ்வரூப் இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தில்லி போலீசார் அவரது இல்லத்துக்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று ராம் ஸ்வரூப் சர்மாவின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் தில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதேபோல் பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிர்ச்சியையும் ஆழ்ந்த இரங்கலையும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending