புதுடெல்லி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 14வது நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதால் 50 ஆயிரம் கோடி மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதில் மாநிலத்துக்கு 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் மத்திய அரசு அளித்த நிதி உதவியும் குறைக்பட்டுள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்ட நிதிச்சுமையை சமாளிக்க இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்” என்று தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தே.ஜ. கூட்டணி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதன்பின்னர் பீகாரில் அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகி, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டு, மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடியை முதல் முறையாக நிதிஷ் இன்று சந்தித்தார்.
மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு
புதுடெல்லி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 14வது நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதால் 50 ஆயிரம் கோடி மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதில் மாநிலத்துக்கு 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய…
1–2 minutes



Leave a Reply