woman - 2026

விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த மனைவியை கொடூரமாக கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசாவில் சந்திரசேகர்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தன் ஆச்சார்யா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் மகள் உள்ளார்.

திருமணம் ஆன மூன்றாவது வருடமே சந்தன் ஆச்சார்யா அவரது மனைவியை விபச்சாரம் செய்ய கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அவர் மறுக்கவே பல வகைகளில் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண் சில வருடங்கள் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த பெண் விபச்சாரத்தை கைவிட்டுள்ளார்.
இதனால் அந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தி வந்த சந்தன் ஆச்சார்யா கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அந்த பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஒரு மது பாட்டிலை திணித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

பின்னர் மறுநாள் இது குறித்து தன் தாயிடம் கூறி அழுதுள்ளார். அவர் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து அந்த பெண்ணை மீட்டு சந்தன் ஆச்சார்யாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending