கொரோனா: பிரபல மகாபாரத சீரியல் நடிகர் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன்
Satish Kaul - 2026

1988 முதல் 1990 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகர் சதீஷ் கவுல் கொரோனாவால் காலமானார்.

300 க்கும் மேற்பட்ட பஞ்சாபி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் சதீஷ் கவுல். இவர் கடந்த ஆண்டு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு சமயத்தில், மிகவும் கடுமையான பண தட்டுப்பாடு ஏற்பட்டு, கண்ணீர் சிந்தியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தனது அன்றாட செலவுகளுக்கு கூட மிகவும் சிரமபடுவதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில், இவருக்கு சில தினங்களுக்கு முன்பு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சதீஷ் கவுலின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.