anjeneyar - 2026

ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்களுடன் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிடப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் குடியிருக்கும் சேஷாச்சல மலைத்தொடரில் உள்ள அஞ்னாத்திரி மலையில் ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்காக பல புராண இதிகாசங்களை ஆய்வு செய்ய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.

அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு தகவல்களை, நாளை மறுதினம் தெலுங்கு வருட பிறப்பான உகாதி அன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending