புது தில்லி: மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது மாநிலங்களவையில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியது…. இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்நாட்டில் அனைத்து முதல்வர்களும் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்கள். இதனை நான் ஒப்புக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். மாறாக குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது. ஜனநாயகத்தில் மிரட்டலுக்கு இடமில்லை. மிரட்டல் அரசியல் கூடாது. 14 வருடங்களாக, நான் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவேன் என்று மிரட்டப்பட்டேன். கறுப்புப் பண விவகாரத்தில் எதிர்க் கட்சிகளை நாங்கள் மிரட்டவில்லை. குற்றவாளிகள் பலருக்கு காங்கிரஸ் காலத்தில் புகலிடம் வழங்கப்பட்டது. கறுப்புப் பணம் தொடர்பாக காங்கிரஸ் ஏன் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவில்லை. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமானது என விமர்சிக்கப்படுகிறது. அப்படி அல்ல. எனது தலைமையிலான அரசு ஏழைகள் நலன் பெற வேண்டும் என்பதற்காகவே செயல்படுகிறது. எதிர்க்கட்சியினருடன் பேசி சுமூக தீர்வு காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டப் பணியால் இந்தியாவின் 40 சதவீத மக்களுக்கு பயன் கிடைக்கும். நிலக்கரி, சுரங்கத்தின் மூலம் வரும் ஏலத் தொகை மாநில அரசின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் நாட்டின் நலன் தொடர்பான விஷயம். இதில் லாப நோக்கம் எதுவும்இல்லை. ஜன் தன் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது தொழில் நோக்கமா ? பென்ஷன் – ஓய்வூதியத் திட்டம் ஏழைகளுக்கு பயன் தரும் திட்டம் . கழிப்பிடம் கட்டுவதில் தொழில் நோக்கமா உள்ளது ? விபத்து காப்பீடு இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் வர்த்தக நோக்கம் இருக்கிறதா என்ன? திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படுவதாக புகார் சொல்கின்றனர். ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றினார்கள். எனது அரசின் நியமனங்கள் தொடர்பாக விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஆளுநர்கள் , செயலாளர்கள் பந்தாடப்பட்டனர். மொபைல் நிர்வாகத்தை முழுமைப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். சென்னையில் மூடப்பட்ட நோக்கியா உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் துவக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மேக் இன் இந்தியா திட்டம் என்பது வேலையைப் பெருக்கும் நோக்கம் கொண்டது. நில சீர்திருத்த சட்ட மசோதாவில் மாற்றம் கொண்டு வர நாங்கள் தயார். அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார் பிரதமர் மோடி.
நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் மோடி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories