rakki
rakki

தில்லியில் கொரோனா பாதிப்பால் தாய், தந்தை இருவருமே கொரோனா வார்டில் உள்ள நிலையில் குழந்தையை போலீஸார் பராமரித்து வரும் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகர் தில்லியில் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தில்லியில் கொரோனா பாதிப்பு காரணமாக தாய், தந்தை இருவருமே கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டதால் குழந்தை ஒன்று பராமரிப்பின்றி வீட்டிலேயே இருந்துள்ளது.

மீரட்டில் வசிக்கும் குடும்பத்தின் உறவினர்களில் ஒருவர் ஷாஹ்தாரா அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட டி.சி.பி எச்.சி ராக்கியிடம் உதவி கேட்டார். எச்.சி.ராக்கி, மூத்த அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு குழந்தையின் பெற்றோரை அணுகி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். உ.பி.யின் மோடிநகரில் வசிக்கும் தாய்வழி பாட்டியிடம் குழந்தையை ஒப்படைத்தார். இதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார் இந்த சம்பவம் தில்லியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending