jegan mohan reddy
jegan mohan reddy

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.

இந்த ஆண்டு சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.

மேலும் மாணவர்களின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது, ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

அதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள், தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்கவேண்டும். வரும் 12ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வித் திட்டத்தையே கண்டிப்பாக அமல்படுத்துவோம். எனக் கூறினார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending