gold - 2026

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து உரிய ஆணவங்களின்றி கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு தங்கநகைகள் காரில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கர்னூல் மாவட்டம், பஞ்சலிங்கா சோதனை சாவடிக்கு சென்ற போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகம்படும்படியாக வந்த காரை வழிமறித்து சோதனை மேற்க்கொண்டனர்.

அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த தங்க வளையல்கள், ஒட்டியாணம், கம்மல் உள்ளிட்ட பலவிதமான தங்கநகைகள் இருந்ததை கண்ட போலீசார், அதனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், காரில் வந்த பெங்களூரை சேர்ந்த அஜய் காடியா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending