monkeys
monkeys

கர்நாடகத்தில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் புதன்கிழமை இரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு கட்டி சக்லேஷ்பூர் – பேகூர் சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் வீசி எறிந்து சென்றனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டதில் அதில் 14 குரங்குகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயக்கமாக இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அந்த 14 குரங்குகளையும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 46 குரங்குகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுத்து, பைகளில் அடைத்து வீசப்பட்ட இந்த சம்பவம் காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

விலங்குகளின் மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும், வன உயிரின ஆர்வலர்களும் பதிவிட்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending