
வடமதுரை அருகே இன்ஜின் கோளாறால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நின்றது.
மதுரை – சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திண்டுக்கல் ஸ்டேஷனில் இருந்து திருச்சி கிளம்பியது. தாமரைப்பாடி கடந்து வடமதுரை நோக்கி வந்தபோது இன்ஜின் கோளாறால் நடுவழியில் நின்றது.
நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் பழுதை கண்டறிந்த டிரைவர், அதை சரி செய்து சென்னை புறப்பட்டது. ஸ்டேஷன்களுக்கு இடையே நடுவழியில் ரயில் நின்றதால் வடமதுரை, அய்யலுார் பகுதிகளில் லெவல்கிராசிங்கில் கேட்கள் தொடர்ச்சியாக அரை மணி நேரம் மூடியே கிடந்தன.
காலை நேரத்தில் அவசர வேலையாக வாகனங்களில் சென்றவர்கள் ரயில் பாதையை கடக்க முடியாமல் பரிதவித்தனர்.
சில டவுன் பஸ்களும் பாதி வழியில் திரும்பி சென்றதால் கிராமங்களில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.