church - 2026

ஜோசப் (எ) சாது சின்ன வெங்கடேஷ்வர்லு என்பவர், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் சர்ச் ஒன்றில் பாதிரியாராக தனது பணியை செய்து வருகிறார்.

திருமணமான போதகர் ஜோசெப்பை சந்திக்க, பல பெண்கள் வருவதுண்டு. அப்படி பழகியவர் தான் 24 வயதான பெண். தன்னிடம் நன்றாக பழகிய அந்த பெண்ணை, பாதிரியார் பல இடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இவர்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று போதகர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் வார்த்தைகளை அந்த பெண் நம்பியதை அடுத்து, அவரின் வீடு, மேலும் பல இடங்களில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

vankodumai 1 - 2026

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த ஜோசப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த ஜோசப் மறுத்து, அந்த பெண்ணையும் அவரின் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த பெண் அந்த ஜோசப் மீது பலாத்கார புகார் கொடுத்த நிலையில், அவரின் இரண்டாவது மனைவியும் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரும் விசாரணையில் உள்ளது நிலையில் அவர் மீது 24 வயதான பெண் பலாத்கார புகார் கொடுத்துள்ளதால் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending