லக்னோ: காணாமல் போய்விட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தரும்படி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்க உகந்ததல்ல என்று கூறி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து, உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு அமர்வில் வந்தபோது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டிஒய் சந்த்ரசூட், நீதிபதி ராஜன் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. இந்த மனுவில், சிறப்பு காவல் படை தலைமை இயக்குனர், மத்திய அரசு இரு தரப்பும் ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியும், எஸ்பிஜியின் கண்காணிப்பில் ராகுல் இல்லை என்றால் அதனை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.
ராகுலை கண்டுபிடித்துத் தரக் கோரும் மனு: நீதிமன்றம் தள்ளுபடி
லக்னோ: காணாமல் போய்விட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தரும்படி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்க உகந்ததல்ல என்று கூறி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து, உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு அமர்வில் வந்தபோது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டிஒய் சந்த்ரசூட், நீதிபதி ராஜன் ராய் ஆகியோர்…
1–2 minutes



Leave a Reply