புது தில்லி:
காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரணதீப் சூரஜ்வாலா செய்தியாளர்களிடம் கூறியபோது…

அமெரிக்காவின் ஆஸ்பன் நகரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக குறுகிய காலப் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெளியாகும் ஊகங்களை மறுக்கிறோம் என்று தெரிவித்தார்.

இருப்பினும் ராகுல்  கலந்து கொள்ள இருக்கும் மாநாட்டுத் தேதி குறித்தோ, அமெரிக்காவில் எத்தனை நாள்கள் அவர் பயணம் செய்கிறார் என்பது குறித்தோ சூரஜ்வாலா தெரிவிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending