அடிக்கடி தமிழர்களுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ்நகர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.
சாம்ராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸின் புட்டரங்கஷெட்டி 75963 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக.,வின் கே.ஆர்.மல்லிகார்ஜுனப்பா 71050 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அவரை அடுத்து பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஏஎம் மல்லிகார்ஜுனசாமி 7134 வாக்குகளும், நான்காவதாக வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகளும் பெற்றனர்.