கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு ஏற்படும் என்று கூறியுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் பாஜகவுக்கு ஆதராவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் இருந்துள்ளது. கர்நாடகாவில் தேர்தல் சதவிகிதத்தை பார்காதீர்கள், மொத்த மக்களுக்கும் பாஜகவுக்குதான் ஆதராவாக இருக்கிறது என்பதை கர்நாடக தேர்தல் காண்பிக்கிறது என்றும் தெரிவித்தார்.
104 இடம் தான் பாஜக பிடித்துள்ளது என்று சொல்லாதீர்கள் 40 இடத்தில் இருந்து 104 இடத்திற்கு வந்துள்ளது என்று கூறுங்கள் என்றும், எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி இல்லை, இந்நிலையில் எப்படி ஆட்சியமைப்பீர்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.