கடந்த ஆண்டு கேரளாவில் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிய படி சென்றவருக்கு அம்மாநில போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கு எதிராக அந்த நபர் கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் ஷபீக், சோமராஜன் அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கேரள போலீஸ் சட்டத்தின் 118 இ பிரிவின் படி வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டுவதும், பிறருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுவதும் தான் தண்டனைக்கு உரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த சட்டப்பிரிவின் எந்த இடத்திலும் வாகனத்தை ஓட்டும் போது செல்போன் பேசுவதால் பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, அச்சுறுத்தல் ஏற்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.