நாளை காலை 11 மணி கர்நாடக சட்டமன்றம் கூடுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மற்றும் கொச்சியில் இருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது பெங்களூரு அழைத்து வரப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நாளைக்குள் எம்.எல்.ஏக்கள் பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் விட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது