ஜியோ சிம்முக்கு போட்டியாக களமிறங்கியது பதாஞ்சலி சிம்; அதுவும் பிஎஸ்.என்.எல்.உடன் கைகோத்து இறங்கியுள்ளது.
பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல், பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது பதாஞ்சலி நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிலும் அடி எடுத்து வைக்கும் விதமாக பி.எஸ்.என்.எல் நிறுவன உதவியுடன் சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிம் கார்டில் ரூ.144 செலுத்தி அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடி அம்சங்களை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது பதாஞ்சலி முன்னெடுத்துள்ள நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் தற்போது வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.