கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதிய மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்திப்பில் ஈடபட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசி வருகிறார்.
முன்னதாக, இந்த சந்திப்பின்போது இரு மாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கமல், `மக்கள் பிரதிநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து என்று கூறியிருந்தார்.