திருப்பதி அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில்,
பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டை பகுதியில் செம்மரம் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையின் போது, சிலர் கார் ஒன்று நடு வழியில் விட்டு ஓடி சென்றது தெரிய வந்தது. அந்த காரை சோதனை செய்த போலீசார் அதிலிருந்த பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மாவட்ட ஆட்சியர் கார் எண்னை போலியாக பொருத்தி செம்மரங்களை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.