கர்நாடகாவின் ஜெயநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

கர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பாரதீய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் வேட்பாளர் 7,000 வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார். 7வது சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 27,195 வாக்குகளை பெற்று உள்ளார். பாஜக வேட்பாளர் பிரகலாத் பாபு 19,892 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து உள்ளார்.

கடந்த மே மாதம் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத்திற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் ஆட்சியமைக்க முடியாமல் போனது.

இதனால், காங்கிரஸ் கட்சி மற்றும் மஜத இணைந்து கூட்டணி ஆட்சி புரிந்து வருகின்றது. முன்னதாக பெங்களூருவின் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

இந்த தொகுதிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.