03 June14 Modi - 2026பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.

பின்னர், ஜகதல்பூர்-ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப் டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம் படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப் பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.

பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார்

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending