மம்தாவுக்கு தூது அனுப்பியது காங்கிரஸ்

தேசிய அளவில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, மெகா கூட்டணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கி உள்ளார் இந்நிலையில், டெல்லியில் முதல்வருக்கும், துணைநிலை கவர்னருக்கும் இடையே நிலவும் பிரச்னை குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது பட்டேல், மம்தாவை சந்தித்துள்ளார். ஆனால் உண்மையில், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான கூட்டணியில் இணைவதற்கு காங்கிரஸ் சார்பில் பேசுவதற்காக தான் அகமது பட்டேல் வந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கூறியே அகமது பட்டேல், மம்தாவை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளின் கூட்டணிக்கு மம்தாவே தலைமை வகிப்பதால், அவரிடம் பேசுவதற்காக அகமது பட்டேல் வந்ததாகவும், டில்லி மாநில அரசியல் விவகாரத்தை காரணமாக வைத்து கூட்டணி பேச்சை காங்கிரஸ் துவக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.