விவசாயிகளுக்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்: மோடி

மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளர்களுடன் பிரதமர் மோடி, நமோ ஆப் மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று நாட்டில் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளுக்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்றதோடு, நாடு முழுவதிலும் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும், கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆண்டிற்குள் இருமடங்காக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், இந்திய விவசாயிகளின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும் கூறினார். மேலும் வேளாண்மையில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்தவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றும் விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் குறிபிட்டார். ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். விதைப்பது முதல் விளைச்சலை சந்தை படுத்துவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் அரசு உதவி வருகிறது என்றும் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.