பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் மாவட்டத்துக்கு செல்கிறார்.
அங்கு அவர் சந்த் கபீரின் 500-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது, போதனைகளையும் சிந்தனைகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட உள்ள கபீர் அகாடமியின் அடிக்கல்லை நாட்டுகிறார்.
முன்னதாக சந்த் கபீர் நினைவிடத்தில் பிரதமர் மலர்கொத்து வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், மாகார் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் கண்டுகளிக்க உள்ளார்.