நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 525 இந்தியர்கள் கடுமையான பனிபொழிவால் சிக்கினர். தூதரக அதிகாரிகள் மூலம் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடங்கப்பட்டது.
சிமிகோட் பகுதியில் சிக்கிதவித்த 19 தமிழர்கள் மீட்பு
கைலாஷ் யாத்திரை சென்றபோது தமிழகத்தை சேர்ந்த 19 சிக்கி தவித்தனர். சிமிகோட் பகுதியில் சிக்கித்தவித்த 19 தமிழர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் சிமிகோட் பகுதியில் இருந்து நேபாள் கஞ்ச் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
உதவி எண்கள் அறிவிப்பு..!
கைலாய யாத்திரைக்கு சென்று நேபாளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்க இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழ் : 977-9808500642,
கன்னடம் : 977-9823672371,
தெலுங்கு : 977-9808082292,
மலையாளம் : 977-9808500644.