விரலை காட்டி செல்பி எடுப்பது ஆபத்தானது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரிக்கை!

விரல்களைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆபத்தானது.சைபர் கிரைம் குற்றவாளிக அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஐபிஎ அதிகாரி ரூபா எச்சரித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் சசிக
லாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியவர்
ஐபிஎஸ் அதிகாரி ரூபா.

இந்த நிலையில் செல்பி புகைப்படங்கள் குறித்து ரூபா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரூபா கூறியிருப்பதாவது: கை விரல்களை பலவிதமாக விரல்களை பெரிதாக்கி காட்டியவாறு எடுக்கும் செல்பி படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வெளியீடுகின்றனர்.

இது மிகவும் ஆபத்தானது. இந்த புகைப்படங்களை கொண்டு கைரேகையை திருடும் வேலையில் சைபர் கிரைம் ஹேக்கர்கள் ஈடுப்பட்டுள்ளனர். செல்பி படத்தில் உள்ள கை விரல்களை பெரிதாக்கி ஸ்கேன் செய்துகைரேகையை எடுக்கிறார்கள். பின்னர் இதைக் கொண்டு பெரிய அளவில் மோசடிகளையும் செய்கிறார்கள்.

எனவே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் செல்பி புகைப்படங்களை தயவு செய்து கைரேகை தெரியும் படி போட வேண்டாம் என்று ஐபிஎஸ் அதிகாரி ருபா கூறியுள்ளார்.