25 July19 ADB - 2026ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சி 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தொடர்ந்து இருக்கும். அமெரிக்கா மற்றும் அதன் வர்த்தக கூட்டு நாடுகளிடையே வர்த்தக போர் பதற்றம் காணப்பட்டபோதிலும் சிறப்பாகவே இருக்கும். 2018ல் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்.

2019ல் இது 7.6 சதவீதமாக உயரும். வங்கி முறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள், வரி சீரமைப்புக்களால் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையிலேயே இருக்கும். ஜிஎஸ்டி மற்றும் வங்கி முறை சீரமைப்பும் ஆசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending