இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, லண்டன் அருகே உள்ள ஹெர்ட்போர்டுஷைர் என்ற இடத்தில் வசிக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த லண்டனில் உள்ள இங்கிலாந்து ஐகோர்ட்டு, அந்த நாட்டில் உள்ள மல்லையாவின் சொத்துகளை முடக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க கோரி இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
பரபà¯à®ªà®© அகà¯à®°à®¾à®¹à®¾à®°à®¾ சிறை இவனà¯à®•à¯à®•à¯à®•à¯à®•ாக காதà¯à®¤à¯à®•à¯à®•ொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•ிறதà¯.