சென்னை: தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரத்த தானம் மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல்! தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், குருதி பரிமாற்றுக் குழுமமும் இணைந்து ரத்த தான முகாம்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. ஓர் ஆண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள், 3 முறை ரத்த தானம் செய்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு 99 விழுக்காடு ரத்தம் தன்னார்வக் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதை 100 சதவீதமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.