சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசு முயற்சிக்கும் செயலை வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி தம்புராட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்ட திருவிதாங்கூர் மன்னர் குடும்ப அஸ்வதி திருநாள் கௌரி லக்ஷ்மி பாய் தம்புராட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது…
சனாதன தர்மத்துக்கு ஏற்பட்ட சவால் இது. மிகவும் வேதனை அளிக்கிறது. ஆசார அனுஷ்டானங்களையும், மத உணர்வுகளையும் புண்படுத்த முயற்சிப்பதால் ஏற்பட்ட மன வேதனையின் வெளிப்படுதல்தான், சபரிமலை தந்திரி நடையைப் பூட்டி சாவியை தேவஸ்வம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதாக கூறியது!
பக்தர்கள் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைந்து வருவது சந்தோஷமாக உள்ளது என்று கூறினார்.