தெலுங்கானா மாநில சட்டசபைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் எந்த கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 119 தொகுதிகளுக்கு நடக்கவுள்ள தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 107 தொகுதிகளிலும், காங்கிரஸ் 95 இடங்களிலும், பாரதீய ஜனதா கூட்டணி 66 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்திருந்தது. ஆனால் வேட்பாளர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் இதுவரையில் எந்த கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது தெலுங்கானா வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari