06 July17 Supreme Court - 2026புதுதில்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை ஒரு வார காலத்துக்கு நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – நீட் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு மே5ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.!

இந்நிலையில் பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுப் பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

25 வயதுக்கு மேற்பட்டோரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதித்திருப்பது வயது வரம்பு குறித்த சிபிஎஸ்இ.,க்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஎஸ்இ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending