school andhra - 2026

வீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்களை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை கொடுத்த தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

ஆந்திராவில் வீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி என்ற தனியார் பள்ளி உள்ளது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் இந்தப் பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர், வகுப்புக்கு வெளியே வெயிலில் ஆடையின்றி சுமார் 1 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர்.

வீட்டுப் பாடம் எழுதாததாலும் பள்ளிக்கு தாமதமாக வந்ததாலும் மாணவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending