australia ind test - 2026

‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மளமளவென ஆஸி., அணி தனது டாப் ஆர்டர் விக்கெட்களை இழந்ததால், இந்திய அணிக்கு வெற்றி கைக்கெட்டிய தூரத்தில் உள்ளது,

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை 151 ரன்களுக்கு முடித்துக் கொண்டதை அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

மயாங் அகர்வால் 42 ரன்கள், பன்ட் 33 ரன்கள் எடுத்தனர். ஆஸி., வீரர் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்(6-27) வீழ்த்தினார்.

இந்நிலையில், கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, 58 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் 4 விக்கெட்கள் கையில் உள்ள நிலையில் மேலும் 128 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இந்திய அணி விரைவாக விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் தொடர் இந்தியாவின் வசமாகும்!

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதனிடையே, மைதானத்தில் இனவெறி கோஷம் எழுப்பப் பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடந்து வரும் மெல்போர்ன் மைதானத்தில் இனவெறி கோஷத்தில் ஈடுபட்ட ரசிகர்களை பின்னர் போலீசார் வெளியேற்றினர்.

For Live Scores … https://dhinasari.com/cricket

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending