pinarayi vijayan - 2026

சபரிமலை போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதங்களின் பட்டியலை இன்று காலை முதல்வர் பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் வாசித்தார்

இரண்டு பெண்கள் சபரிமலை சந்நிதி முன்னர் அரசால் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்ட விவகாரத்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது. இந்தப் போராட்டங்களில், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பல இடங்களில் போராட்டக் காரர்கள் மீது கல்லெறிந்து, வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையால் 7 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன என்றும், 79 கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன என்றும், 39 போலீசார் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறினார்

தாக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்று குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்! மேலும், ஊடகத்தைச் சேர்ந்த பெண்களும் தாக்குதலுக்கு இலக்கானதாக விஜயன் கூறியுள்ளார்

இதனிடையே பந்தளம் பகுதியில் சபரிமலை கர்ம சமிதி மற்றும் பாஜகவினர் பேரணியாகச் சென்று தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending